டெவெலப்பர்களுக்கான YouTube
YouTube ஐ எந்த திரைக்கும், எந்த நேரத்திலும் கொண்டு வரலாம்.
உங்கள் பயனர்களுக்காக YouTube ஐக் கொண்டுவர விரும்புகிறீர்களா? YouTube APIs மற்றும் கருவிகள், உங்கள் இணையதளம், பயன்பாடு அல்லது சாதனத்தில் YouTube வீடியோவின் உள்ளடக்கத்தையும் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்க உங்களைச் செயல்படுத்தும்.
மேலோட்டம்
YouTube உடன் ஒருங்கிணையவும்
தரவு APIs YouTube செயல்பாட்டை உங்களுக்குச் சொந்தமான பயன்பாடு அல்லது இணையதளத்தில் இணைத்துக்கொள்ள உங்களை அனுமதிக்கும். நீங்கள் தேடல்களைச் செயற்படுத்தலாம், வீடியோக்களை ஏற்றலாம், பட்டியல்களை உருவாக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
YouTube பிளேயரைத் தனிப்பயனாக்குக
பிளேயர் APIs உங்கள் இணையதளம் அல்லது உங்கள் மொபைல் பயன்பாட்டில் YouTube வீடியோவை மீண்டும் இயக்குவதற்கான கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்கும். அடிப்படை அமைப்புகளை உள்ளமைக்கலாம், பிளேயரின் இடைமுகத்தை இயக்கலாம் அல்லது பிளேயர் கட்டுப்பாடுகளையும் சொந்தமாக உருவாக்கலாம்.
உங்கள் பயனர்களிடம் இருந்து வீடியோ சமர்ப்பிப்புகளைச் சேகரித்து மதிப்பீடு செய்க
YouTube Direct Lite ஆனது உங்கள் தள வருகையாளர்கள் வழங்கும் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை எளிதாகப் பெறவும், சமர்ப்பிப்புகளை மதிப்பீடு செய்யவும், உங்கள் தளத்தில் அவற்றைக் காட்சிப்படுத்தவும் அனுமதிக்கிறது.
மேலும் அறிக
உங்கள் பயன்பாட்டில் வீடியோக்களை உட்பொதிக்கவும்
iframe உட்பொதித்தல், பிளேயர் அளவுருக்கள் அல்லது iframe மற்றும் Android பிளேயர் APIs போன்றவற்றைப் பயன்படுத்தி, உங்கள் இணையம் அல்லது மொபைல் பயன்பாட்டில் YouTube வீடியோக்களைக் காட்சிப்படுத்துவது மற்றும் பிளேயரைத் தனிப்படுத்துவது மிகவும் எளிதாகும்.
வீடியோ பகுப்பாய்வுகளைப் பெறுக
Analytics API ஐப் பயன்படுத்தி உங்கள் YouTube வீடியோக்கள் மற்றும் சேனல்களில் உள்ள பார்வைப் புள்ளிவிவரங்கள், பிரபலத்தன்மை அளவீடுகள் மற்றும் புள்ளிவிவரத் தகவல்களைப் பெறுக.
உங்கள் பயன்பாடு அல்லது தளத்திலிருந்து வீடியோக்களைப் பதிவேற்றவும்
வீடியோக்களை நேரடியாக பதிவேற்ற YouTube தரவு APIs ஐப் பயன்படுத்தவும். இதை உங்களுக்கு எளிதாக்குவதற்காகவே பல நிரலாக்க மொழிகளில் க்ளையன்ட் நூலகங்களை வைத்துள்ளோம்.